இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு.. படத்தில் இணைந்த வாரிசு நடிகை - விரைவில் வெளியாகும் First Look!

By Ansgar RFirst Published Feb 9, 2024, 10:02 PM IST
Highlights

Vishnu Vardhan Next Movie : பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "Shershaah" என்ற ஹிந்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற் நிலையில், இப்போது அவர் சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

சிறு வயது முதலையே தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இயக்குனர் விஷ்ணு வர்தன் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான மணிரத்தினம் அவர்களின் "அஞ்சலி" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு சத்ரியன் மற்றும் இருவர் ஆகிய மணிரத்தினத்தின் திரைப்படங்களிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

அதன் பிறகு தனது பட்டப் படிப்பை முடித்த விஷ்ணுவர்தன் 2003 ஆம் ஆண்டு வெளியான "குறும்பு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தமிழில் இயக்கிய விஷ்ணுவர்தன் 2007 ஆம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களின் "பில்லா" படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!

தற்பொழுது "The Bull" என்கின்ற பெயரில் சல்மான் கான் அவர்களை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ள விஷ்ணுவர்தன் தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்கி வெளியிட இருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முக்கிய இடங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்திற்கான படபிடிப்பு போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கவிருக்கிறார். யட்சன் என்ற படம் தான் தமிழில் விஷ்ணு இறுதியாக இயக்கி வெளியிட்ட படம். 

லதா ரஜினிகாந்துடன்... கேக் வெட்டி 'லால் சலாம்' படத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால் - விக்ராந்த்! போட்டோஸ்!

click me!