ஆண்டவருக்கு போட்டியாக அரசியல் களத்தில் மெகா ஹிட் நடிகர்? - எந்த கட்சி சார்பாக தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

By Ansgar RFirst Published Feb 9, 2024, 5:32 PM IST
Highlights

Mass Actor Entering Politics : மக்களவை தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தயார் செய்து வருகின்றன.

தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை மிகப் பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடவில்லை என்றும், தனது கட்சியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றி கட்சி தலைவர் விஜய்.  

மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தளபதி விஜய் அவர்கள் களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகப் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். 

Latest Videos

ஆ ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.. இது தான் அவருக்கான தண்டனை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

இந்த சூழலில் ஒரு புதிய வேட்பாளரை தமிழகத்தில் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக உலகநாயகன் கமலஹாசன் தென் சென்னையில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதால் அவரை எதிர்த்து பாஜக தனது வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அந்த போட்டியாளர் வேறு யாரும் அல்ல பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தான். கடந்த சில மாதங்களாக ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் மோடி அவர்களை சந்தித்து பேசியது குறித்து அனைவரும் அறிவர். ஆகையால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும், அவர் கமலுக்கு எதிராக களம்காண்பர் என்று ஒரு பிரபல அரசியல் விமர்சகர் தனது youtube சேனலில் கூறியுள்ளார். 

MK Alagiri: மு.க.அழகிரி எதிரான வழக்கு.. 12ம் தேதி வெளியாகிறது தீர்ப்பு..!

click me!