அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனாவிற்கு பலியான மற்றொரு தமிழ் திரையிலாக பிரபலம்..!

By manimegalai aFirst Published May 13, 2021, 7:52 PM IST
Highlights

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், எதிர்பாராத விதமாக சில மரணங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்று, காமெடி நடிகர் மாறன் உயிரிழந்த நிலையில், அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு பிரபலத்தின் உயிரை கொரோனா புரிந்துகொண்ட சம்பவம் பேரிடியாய் இறங்கியுள்ளது தமிழ் திரையுலக பிரபலங்கள் மத்தியில்.
 
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. தினசரி பாதிப்பு 29,000ஐ நெருங்கி வருகிறது. ஆகையால், வேறு வழியில்லாமல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு. எனினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல், தங்களின் அன்றாட பணிகளை கட்டிட தொழிலாளர்கள் போன்ற கூலி தொழிலார்கள் செய்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உள்ளது.

எனினும், பணி செய்யும் இடத்தில், கொரோனா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும், மாஸ்க், சானிடைசர், மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், காற்றின் மூலம் பரவி பலரை தாக்கி வருகிறது கொரோனா.

குறிப்பாக தமிழ் திரையுலகில், இயக்குனர் கேவி ஆனந்த், தாமிரா, காமெடி நடிகர் மாறன், பாண்டு என அடுத்தடுத்த பிரபலங்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது, கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87 ' என்ற படத்தை தயாரித்தும் இயக்கியும் இருந்தவர் விஜய்ஸ்ரீ.  இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த கலைச்செல்வன் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக விஜய்ஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!