
விஜய், தனுஷ், கமலஹாசன், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில், வில்லனாக நடித்து வரும் டேனியல் பாலாஜி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதல் அலையை விட , கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது இரு வாரங்களுக்கு, ஊரடங்கு உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதே போல் 18 வயதிற்கு மேலே உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டு கொண்டார்.
மேலும் இதுவரை நடிகர் சூர்யாவின் துவங்கி, அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே, மாதவன், அருண் பாண்டியன், மற்றும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து பூரண குணமடைந்தனர். அதே நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக , சில பிரபலங்களையும் இழந்துள்ளது தமிழ் சினிமா.
தற்போது கமலஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' சூர்யா நடித்த 'காக்க காக்க' தனுஷ் நடித்த 'பொல்லாதவன் விஜய் நடித்த 'பிகில்' உள்ளிட்ட பல திரைப்படங்களில், தரமான வில்லமாக வந்து மிரட்டிய, நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.