சீமான் தந்தை மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல்..!

Published : May 13, 2021, 06:57 PM IST
சீமான் தந்தை மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல்..!

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவை அடுத்து, பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவை அடுத்து, பிரபல இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மட்டும் இன்றி, நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் ரசிகர்களால் அறியப்படுபவர் சீமான்.  இவரது தந்தை செந்தமிழன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், மற்றும் பலர் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் "தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சீமான் மற்றும அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார். 

மேலும் தற்போது, என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!