Actress Amala Paul : மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2010ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான "மைனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்ற நடிகை தான் அமலா பால்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மாற்றும் ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் அமலா பாலின் வாழ்க்கை குறித்து ஒரு பிரபலம் அண்மையில் பேசிய பேட்டியில் மனம் திறந்து உள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் பெரும் விரக்தியில் இருந்ததாகவும், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் சொல்ல முடியாத கஷ்டங்கள் என்று கூறியுள்ளார் கோடங்கி.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விமர்சகர் கோடாங்கி.. நடிகை அமலா பால் பாரபட்சமின்றி அனைவரிடமும் நல்ல முறையில் பேசி பழகக் கூடியவர். தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படத்திலிருந்து அவருக்கான வலிகள் துவங்கியது. இப்போது நீங்கள் அவரை கேட்டால் கூட அவரது முதல் திரைப்படம் "மைனா" என்று தான் சொல்லுவார். அதற்கு காரணமே "சிந்து சமவெளி" படத்தின் மோசமான கதை தான் என்றார் கோடங்கி.
அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அதன் பிறகு அந்த வாழ்க்கையில் அவருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறினார் கோடங்கி. அவர் செய்த சில தவறுகளை சுட்டிக்காட்டி அவர் உள்ளத்தை நொறுக்கியதே அவர் தன் கணவரை விட்டு பிரிய காரணம் என்றார் அவர். இரண்டாவது திருமணத்தையும் நல்ல முறையில் காதலித்து செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய அமலா பால், பலரை நம்பி ஏமாந்துள்ளார்.
பழைய பாடலை பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தியதால் வெடித்த சர்ச்சை... சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான்
ஆடை படத்தில் கூட அமலாபால் நடித்தது அப்படித்தான், இந்த படத்தில் நடித்தால் நீங்கள் உச்சத்திற்கு போய் விடுவீர்கள் என்று கூறி அவரை நம்ப வைத்து அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்ததாக கோடங்கி பேசினார். தொடர்ச்சியாக பலரை நம்பி ஏமாந்த அமலா பாலுக்கு தற்பொழுது அவருடைய மனம் கவர்ந்த காதலன் கணவராக கிடைத்துள்ளார் இனி அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.