தியேட்டர் உள்ளே வெடித்த பட்டாசுகள்.. அலறி ஓடிய மக்கள்.. சல்மான் ரசிகர்களின் பலே வேலை - அவர் ரியாக்ஷன் என்ன?

Ansgar R |  
Published : Nov 14, 2023, 07:38 AM IST
தியேட்டர் உள்ளே வெடித்த பட்டாசுகள்.. அலறி ஓடிய மக்கள்.. சல்மான் ரசிகர்களின் பலே வேலை - அவர் ரியாக்ஷன் என்ன?

சுருக்கம்

Tiger 3 Movie : இயக்குனர் மணீஷ் சர்மா இயக்கத்தில், பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள Tiger 3 திரைப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியானது. சல்மான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம். 

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மோகன் திரையரங்கில் நேற்று முன்தினம் தீபாளி என்று இரவு Tiger 3 திரைப்படம் திரையிடப்பட்டபோது அங்கு குழுமிய சல்மான் கானின் ரசிகர்கள் குழு, திரையரங்கிற்குள் அவ்வளவு மக்கள் குடியிருந்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இது உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் பாதுகாப்புக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளது. 

இந்த பட்டாசு வெடிப்பு சம்பவம் குறித்து வெளியான ஒரு வீடியோவில் திரையரங்கில் டைகர் 3 திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென இருக்கைக்கு மத்தியில் இருந்து ஒரு பட்டாசு வெடிக்க துவங்குகிறது. இதைக் கண்டு மக்கள் இருபுறமும் அலறி அடித்து ஓடிய நிலையில், எதிரே இருந்த இரு புறங்களும் மேலும் இரண்டு பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. 

தேங்க் யூ பொண்டாட்டி! மனைவி ஜோதிகாவுக்கு உருக்கமாக நன்றி சொல்லும் நடிகர் சூர்யா!

ஒரு கட்டத்தில் மக்கள் செய்வது அறியாது வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள திரையரங்கின் மூளைகளுக்கு ஓடுவதை தெளிவாக அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. இதுகுறித்து திரையரங்கினர் அளித்த புகாரின்படி, தற்பொழுது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவம் சல்மான் கான் கவனத்திற்கு சென்றுள்ளன நிலையில் அவர் தற்பொழுது ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் படம் பார்க்க வரும்பொழுது தங்களுடைய பாதுகாப்பையும் பிறருடைய பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?