Leo Movie 25th Day : லியோ திரைப்படம் வெளியாகி நேற்றோடு 25 நாட்கள் முடிந்துள்ள நிலையில், சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. உலக அளவில் லியோ திரைப்படம் 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகி உலக அளவில் வெற்றிகரமாக இன்றளவும் ஓடிவரும் திரைப்படம் தான் லியோ. ஆயுத பூஜை திருநாளுக்கு முன் வெளியான லியோ, திரைப்படம் தற்போது தீபாவளி திருநாள் அன்றும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் பெரிய மாஸ் வெற்றியை கொடுக்காத நிலையில், லியோ திரைப்படமே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக அளவில் 100 கோடியை விரைவில் எட்டிய திரைப்படமாக லியோ திரைப்படம் திகழ்ந்துவரும் நிலையில், லண்டன், பிரான்ஸ், இலங்கை, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படமாக லியோ படம் மாறியுள்ளதும் நினைவுகூரத்தக்கது.
Ratata 🔥 - It's a Freakin' Badass 25th Day of ❤️
Industry Blockbuster Pathachu maa 💥
Wishing you all a Happy & Bloody Sweet ✨🪔 sir … pic.twitter.com/5SPzNIytHD
அது மட்டுமல்லாமல் தற்பொழுது 25வது நாளை எட்டியுள்ள லியோ திரைப்படம் உலக அளவில் சுமார் 605 கோடி வசூல் செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஜெயிலர் திரைப்படத்தை விட அதிக வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் பட குழு இன்றளவும் வெளியிடவில்லை.
இதனால் மீண்டும் ஒருமுறை தான் ஒரு ரெக்கார்ட் மேக்கர் என்பதை தளபதி விஜய் அவர்கள் நிரூபித்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா, இயக்குனர்களின் கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்க்கின், மூத்த நடிகர் அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.