விஜய்யின் கோட்டையில் திடீரென ரோட்ஷோ நடத்திய ரஜினிகாந்த்... சூப்பர்ஸ்டாரின் அலப்பறையான வீடியோ வைரல்

By Ganesh A  |  First Published Oct 5, 2023, 8:35 AM IST

தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.


ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 170. கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்ற படங்களை இயக்கிய த.செ.ஞானவேல் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், புகழ்பெற்ற வில்லன் நடிகர்களான ராணா டகுபதி மற்றும் பகத் பாசில், இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், சார்பட்டா பரம்பரை ஹீரோயின் துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதுதவிர விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அப்போது காரின் ரூஃப் டாப் வழியாக ரசிகர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார் ரஜினிகாந்த்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் ரஜினிக்கு இவ்வளவு மாஸா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். கேரளா என்றாலே விஜய்யின் கோட்டை என்று சொல்லப்படும் நிலையில், அங்கு நடிகர் ரஜினிகாந்த் காரில் மாஸாக ரோட்ஷோ நடத்திய வீடியோ காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படியுங்கள்...'தலைவர் 170' படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளர்! சிம்பிளாக நடந்த பூஜையில் மாஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினி

click me!