'தலைவர் 170' படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளர்! சிம்பிளாக நடந்த பூஜையில் மாஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கிய நிலையில், இந்த படத்தில் விஜய் டிவி தொகுப்பாளரும் கலந்து கொண்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Rajinikanth 170th Flim
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170-ஆவது படத்தை, 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலக்குரலை திரையில் ஒலிக்க செய்த, இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் தன்னுடைய முதல் பட பாணியிலேயே... மனதை உருக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குகிறார்.
Thalaivar 170 Cast
இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக... பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் போன்ற திறமையான ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்து நடிக்க உள்ளது. இவர்களை தவிர மற்ற சில பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
Vijay tv Rakshan Join in Thalaivar 170 Movie
இதனை உறுதி செய்யும் விதமாக, இன்று தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் எளிமையான பூஜையோடு துவங்கிய நிலையில், இதில் விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் கலந்து கொண்டு, இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர் மற்றும் ஜி.எம்.சுந்தர் போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர்.
thalaivar 170 poojai stills goes viral
தற்போது, 'தலைவர் 170' படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தை லைகா நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ள நிலையில், விரைவில் இந்த படத்தின் தலைப்பையும் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D