
நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ள 'ஹாஸ்டல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நான்கு ஆண்கள் மத்தியில் பிரியா பவானி ஷங்கர் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ஓவர் ஸ்லிம்... பச்சை நிற பட்டு புடவையில் பார்க்க பார்க்க திகட்டாத அழகில் சினேகா..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர் . ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்து வரும் திரைப்படம் 'ஹாஸ்டல்'. மேலும் இந்த படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'அடி கப்பியாரே கூட்டமணி'. என்கிற படத்தின், ரீமேக்காக இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வருடங்களாகவே இந்த படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்: தள்ளி போகும் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! அப்செட்டில் தல ரசிகர்கள்..!
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரிலீஸ் குறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தார். அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர், சதீஷ், உள்ளிட்ட நான்கு ஆண்களுக்கு மத்தியில் பிரியா பவானி ஷங்கர் அமர்ந்திருப்பது போன்று இந்த போஸ்டர் உள்ளது. காதலன் மூலம் ஆண்கள் ஹாஸ்டலுக்குள் வரும் நாயகி, பின்னர் அங்கே மாட்டி கொண்டு, வெளியேற முடியாமல் தவிப்பதையும், அவரது நண்பர்கள் நாயகியை மறைக்க எடுக்கும் முயற்சிகளையும் காமெடியாக கூறும் திரைப்படம் 'ஹாஸ்டல்'.
இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.