தள்ளி போகும் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! அப்செட்டில் தல ரசிகர்கள்..!

Published : Apr 24, 2021, 10:49 AM IST
தள்ளி போகும் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! அப்செட்டில் தல ரசிகர்கள்..!

சுருக்கம்

அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளை 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லூக்குடன் கொண்டாட கார்த்திருந்த ரசிகர்களுக்கு இது, மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவலை போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார்.

அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கும் விதமாக, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது... "எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டுள்ளது. அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளை 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லூக்குடன் கொண்டாட கார்த்திருந்த ரசிகர்களுக்கு இது, மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்