‘சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க்’... சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ஏன் தெரியுமா?

Published : Apr 23, 2021, 06:51 PM IST
‘சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க்’... சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ஏன் தெரியுமா?

சுருக்கம்

கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெருமைப்படுத்தும் விதமாக செய்துள்ள காரியம் அவரிடமிருந்தே நேரடி பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.   

‘சூப்பர் ஸ்டாருன்னு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்’ என ரஜினி படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலைப் போலவே 5 வயது முதல் 60 வயது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காதவர்களோ, தெரியாதவர்களோ இருக்கவே முடியாது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெருமைப்படுத்தும் விதமாக செய்துள்ள காரியம் அவரிடமிருந்தே நேரடி பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. 

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அத்வைத். 300 க்யூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தினை உருவாக்கியுள்ளார். அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ரூபிக்ஸ் க்யூப்ஸுடன் உருவப்படங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் இந்த உருவப்படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்’ என அந்த வீடியோவையும் பதிவிட்டிருந்தார். 

சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான அந்த வீடியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிலும் பட்டுள்ளது. உடனடியாக சிறுவனின் திறமையை பாராட்ட எண்ணிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ‘சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க்’ என ஆடியோ மூலமாக வாழ்த்தியுள்ளார். இதனை சிறுவன் அத்வைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.‘உங்களுடைய ஆடியோ மெசெஜ்க்கு நன்றி ரஜினி சார். இதை நான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!
Music: வார்த்தைகளை சூப்பர் ஹிட்டாக்கிய இளையராஜா.! ராஜா - வைரமுத்து கூட்டணியின் சொக்க வைக்கும் Top பாடல்கள் லிஸ்ட்!