சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

manimegalai a   | Asianet News
Published : Apr 23, 2021, 06:10 PM IST
சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சுருக்கம்

நடிகர் சிம்பு உடல் எடையை பாதியாக குறைத்து, செம்ம ஸ்டைலிஷாக நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில், முடிவடையும் என நடிகர் சிம்பு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் பைனலில் கலந்து கொண்டபோது தெரிவித்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்த கையேடு, ஒரு சில மாதங்களிலே படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'மாநாடு' படத்தின், புரோமோஷன் பணிகளை இப்போதே துவங்கி விட்டார். சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் தினமான மே 14ம் தேதி ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சிம்பு மற்றும் யுவனின் ரசிகர்களால் மாபெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சிம்பு ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!