தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல்... அடுத்த சித்ராவாக நான் மாறிவிட கூடாது! பரபரப்பை ஏற்படுத்திய சீரியல் நடிகை!

Published : Apr 23, 2021, 08:00 PM IST
தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல்... அடுத்த சித்ராவாக நான் மாறிவிட கூடாது! பரபரப்பை ஏற்படுத்திய சீரியல் நடிகை!

சுருக்கம்

சின்னத்திரை நடிகை ஜெனிபர் தனக்கு மறைந்த நடிகை சித்ரா நிலைமை வந்துவிட கூடாது என்பதற்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் என கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சின்னத்திரை நடிகை ஜெனிபர் தனக்கு மறைந்த நடிகை சித்ரா நிலைமை வந்துவிட கூடாது என்பதற்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் என கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை ஜெனிபர் குறித்து, சமீபத்தில் வெளியான தகவல் ஆதரிசியிற் ஏற்படுத்தியது. அதாவது, இவர் நடித்து வரும் சீரியலில் பணிபுரியும், துணை இயக்குனரை... ஜெனிபர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்ததாகவும், இதனை அறிந்த நவீன் ஜெனிபர் பெற்றோரிடம் நியாயம் கேட்க சென்றபோது, அவர்கள் நவீனை தாக்கியதாகவும், பின்னர் இரு தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டதாக கூறப்பட்டது. 

இந்த சர்ச்சைக்கு மத்தியில், ஜெனிபர் சென்னை காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில்... தனக்கு முதல் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் ஆனதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. காதலன் மட்டுமே உள்ளார். ஆனால்  பத்திரிகையாளர்கள் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தனது தங்கையை மான்பங்க படுத்திவிட்டர்கள் என்றும் அதனால் தான் என் தந்தை அவர்களை தாக்கினார். தனக்கு நியாயம் கிடைக்கவே போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும் தனக்கு சித்ராவின் நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்  நியாயம் கேட்டு வந்திருப்பதாகவும் தனது தங்கையை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சீரியல் நடிகை ஜெனிபர் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!