பருத்திவீரன் கெட்டப்பில் ஆர்யா மிரட்டும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By manimegalai a  |  First Published May 13, 2023, 9:21 PM IST

நடிகர் ஆர்யா நடித்து முடித்துள்ள  'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
 


ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில்ம், கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது புதிய போஸ்டருடன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆர்யாவின் தோற்றம் பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்தியை நினைவு படுத்துவதாக கூறினர்.

Tap to resize

Latest Videos

சந்திரமுகி 2 படம் குறித்து வெளியான ஹாட் அப்டேட்!

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, சிபுவுக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு', மற்றும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரீஸ்' ஆகிய படங்களில் நடித்த சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். 

ரசிகர்களை மயக்கும் மகாராணி தோற்றத்தில்..! டீப் நெக் கவர்ச்சி காட்டிய ஷிவானி நாராயணன்.. வேற லெவல் போட்டோ ஷூட்!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2-ம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

click me!