
'சர்தார்' படத்தின், வெற்றிக்கு பின்னர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'ஜப்பான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், கார்த்தி வித்தியாசமான funky லுக்கில் உள்ளார். கழுத்து நிறைய செயின், ஒரு கையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ... மறுகையில் பூலோக உருண்டை என ஜிகுஜிகு தங்க உடையில் ஜொலிக்கிறார்.
இந்த திரைப்படம் காமெடி ஜர்னரில் உருக உள்ளதா? என்கிற கேள்வி போஸ்டரை பார்த்தல் எழுகிறது. ஜப்பான் படத்தை, 'ஜோக்கர்' பட இயக்குனர் ராஜு முருகன் எழுதி இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை மட்டுமே இயக்கி வரும், ராஜு முருகன் இந்த படத்தையும் தன்னுடைய பாணியிலேயே இயக்குவார் என்பது போஸ்டர் மூலமே தெரியவருகிறது. இந்த ஆண்டு வெளியான கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்பதை இப்போதே கூறி கொண்டாடி வருகிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள். மேலும் இன்று காலை நடிகர் கார்த்தி தன்னுடைய முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்த நிலையில், பின்னர் ரெக்கவர் செய்ததாக கூறப்பட்டது.
Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.