Kanguva: 'கங்குவா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த 'A' சான்றிதழ்! இது தான் காரணமாம்?

By manimegalai a  |  First Published Mar 23, 2024, 3:43 PM IST

சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள், 'A' சான்றிதழ் கொடுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 


ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 

மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

Tap to resize

Latest Videos

Famous TV Actors: ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Ormax தகவல்!

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக  திஷா பதானி நடித்துள்ளார்.

'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் மூத்த மருமகள் இவங்க தானா? நான்கு வருடத்திற்கு பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை!

தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படம் குறித்து, அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்... தற்போது சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, 'கங்குவா' படத்தில் அதிகப்படியாக வைலன்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால்... சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு 'A' சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

click me!