அட்ரா சக்க.. 25 ஆண்டுகள் கழித்து இசை புயலோடு இணையும் சூப்பர் ஹிட் நடிகர் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Ansgar R |  
Published : Mar 22, 2024, 08:04 PM IST
அட்ரா சக்க.. 25 ஆண்டுகள் கழித்து இசை புயலோடு இணையும் சூப்பர் ஹிட் நடிகர் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுருக்கம்

Isai Puyal AR Rahman : பிரபல இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள், சுமார் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பிரபல நடிகருடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் அவர்களின் மகன் தான் இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா. தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் அவர் குரூப் டான்ஸராக நடனமாடியுள்ளார். குறிப்பாக 1988 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சத்யராஜின் "ஜீவா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் டான்சராக திரையுலகில் அறிமுகமானார். 

"மைக்கேல் மதன காமராஜன்", "இதயம்", "சூரியன்" மற்றும் "அக்னி நட்சத்திரம்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் குரூப் டான்ஸராக பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான "இந்து" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானார் பிரபு தேவா.

Anjali Marriage: விவாகரத்தான தயாரிப்பாளருடன் மலர்ந்த காதல்? அஞ்சலிலு விரைவில் திருமணமா? தீயாய் பரவும் தகவல்!

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான "காதலன்", "ராசையா", "லவ் பேர்ட்ஸ்", "மிஸ்டர் ரோமியோ", "மின்சார கனவு" மற்றும் "வி.ஐ.பி" என்று தொடர்ச்சியாக பல வெற்றி படங்கள் அமைந்தது. அதிலும் குறிப்பாக இவருடைய "காதலன்", "லவ் பேர்ட்ஸ்" மற்றும் "மின்சார கனவு" உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகள் கழித்து பிரபுதேவாவும், ஏ ஆர் ரகுமானும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையுள்ளனர். பிரபல Behindwoods நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

White Rose Release Date: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!