
இந்திய நாட்டிற்காக, பல்வேறு போராட்டங்கள் செய்து, ரத்தம் சிந்தி, உயிர் நீத்து வாங்கிய சுதந்திரத்தை அவமதிப்பது போல், கங்கனா வெளியிட்ட கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதை-யும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
தமிழில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான 'தலைவி' படத்தில் நடித்திருந்தவர் கங்கனா ரனாவத். இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்ததற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்கள் குவித்தாலும், இவருடைய அந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுக்க வில்லை என்பதே தமிழ் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருந்தது.
மேலும் செய்திகள்: Malavika Sundhar : தன்னை விட இளைய வயது காதலரை கரம் பிடித்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் மாளவிகா! திருமண போட்டோஸ்
பாலிவுட் நடிகையான இவர், அவ்வப்போது நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறுவது வழக்கமான ஒன்று தான். சமந்தாவின் விவாகரத்து விஷயத்தில் கூட, அமீர் கான் தான் இதற்க்கு காரணம் என்பது போல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவரை சிறந்த நடிகைக்கான 4 முறை தேசிய விருதை பெற்றுள்ளது இவருக்கு, சமீபத்தில் பத்ம விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்: Janhvi Kapoor: பாலைவனத்தை படு சூடாக்கிய ஜான்வி கபூர்.. குட்டை டவுசரில் தொடையழகி ரம்பாவை மிஞ்சிய ஹாட் போட்டோஸ்!
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா... சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பது போல் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை என்றும், 2014 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. என்பது போல் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்: Pooja Hegde: கொசுவலை போன்ற தாவணியில்... வெள்ளை நிற ரோஜா போல் மின்னும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே!!
இவரது கருத்துக்கு பாஜகவின் முன்னணி தலைவரும் எம்.பியுமான வருண்காந்தி கங்கானாவின் அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவை வெளியிட்டு தன்னுடைய கடும் கண்டனங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தேச துரோகம் இல்லையா? என்பது போல் கேள்வி எழுப்பி உள்ளார். அதே போல் இவரது பேச்சை கடுமையாக கண்டித்து ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரித்தி சர்மா கங்கனா மீது மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Samantha: விவாகரத்துக்கு பின் சமந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
மேலும் நெட்டிசன்கள் பலர், சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய கங்கனாவின் பத்ம விருதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த பேச்சு தொடர்பாக கங்கனா மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.