
சமீபத்தில் காலமாக முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கோல்டன்விசா பெற்று வருகிறார்கள் அந்த வகையில், ஏற்கனவே... மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், விஜய் சேதுபதி, பார்த்திபன், வெங்கட் பிரபு, மீரா ஜாஸ்மின் போன்ற பலர் யுஏஇ அரசின் கோல்டன் விசா பெற்றனர். இவர்களை தொடர்ந்து கமல்ஹாசனும் கோல்டன் விசா பெற்றுள்ளார்.
யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாத ஒன்றாகும். தங்களுடைய துறையில், சிறந்து விளங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அதே போல், சமூக சேவை பணியில் ஈடுபட்டு வருபவர்கள், அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கும் இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: அடங்காத மாளவிகா மோகனன்... குட்டை உடை கவர்ச்சியில் அதிகரித்து கொண்டே செல்லும் கிளாமர் அட்ராசிட்டி!
இந்த விசாவை பெறுபவர்களுக்கு அந்நாட்டு அரசு சில சலுகைகளையம் வழங்குகிறது. அந்த வகையில், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி தங்களுடைய பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிப்படுவர். குறிப்பாக இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள்.
மேலும் செய்திகள்: புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்! குஷியான ரசிகர்கள்!
5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விசாவை ஏற்கனவே பல பாலிவுட் பிரபலங்கள் பெற்றுள்ள நிலையில், சமீப காலமாக கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து பெற்று வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கோல்டன் விசா நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துளளது. எனவே கோல்டன் விசா பெறுவதில் பெருமை படுவதாகவும், இந்த விசாவை வழங்கியதற்கு தன்னுடைய நன்றிகளையும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.