உடல்நல பிரச்சனை காரணமாக, பன்முக கலைஞர் டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நிலையில் தற்போது இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பன்முக கலைஞர் டி ராஜேந்தர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி மேல்சிகிச்சைக்காக கடந்த 14-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். தற்போது சுமார் ஒரு மாதத்திற்கு மேல், அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் தேறி சென்னை வர உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: ஒருதலை காதலால் விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? உண்மை என்ன... வைரலாகும் வீடியோ..!
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அவர் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்க தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ஆரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்... கடற்கரையில் காதல் பொங்க பொங்க போட்டோ ஷூட் நடத்திய நயன் - விக்கி! போட்டோஸ்
டி.ஆர் சிகிச்சை பெற்று வந்த போது, அவருடன் இருந்த அவரது இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர். சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை டி.ஆர்.சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!
மேலும் டி.ராஜேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, இலட்சிய திமுக தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதே போல் டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
.