எதிர்பாராத நேரத்தில் நான்கு போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்!

Published : Oct 06, 2019, 06:53 PM ISTUpdated : Oct 06, 2019, 06:58 PM IST
எதிர்பாராத நேரத்தில் நான்கு போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், யார் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், யார் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்து கொள்வதில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள நான்கு போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கமலஹாசன்.

உள்ளே வந்த அவர், அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு இவர்கள் நால்வருக்கும் ஒரு அன்பு பரிசு எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அது என்ன பரிசு,  என தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருந்த நிலையில்,  ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ளதை எடுத்து வருமாறு சாண்டி மற்றும் முகேனிடம் கூறினார்.

அங்கு இந்த நான்கு பிரபலங்களுக்கும் தன்னுடைய கைகளால் கமல், எழுதப்பட்ட கவிதை ஃபிரேம் ஒன்று இருந்தது.  இருந்தது அதை எடுத்து வந்த இடம் கொடுக்க முதலில் சாண்டியின் பெயரில் எழுதப்பட்டிருந்த கவிதையை படித்தார். அதில் முழுக்க முழுக்க... சென்னை பாஷையில் எழுதப்பட்டிருந்ததை படித்தார்.  பின், ஷெரின், லாஸ்லியா, முகேன் என அனைவருக்கும் எழுதப்பட்ட கவிதையை படித்து  அவர்கள் சற்றும் எதிர்பாராத சர்பிரைஸ் கொடுத்தார் கமல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!