
’யாரு ஜெயிச்சாலும் சந்தோசமா இருக்கும். ஆனா அவங்க எல்லாரையும் விட லாஸ்லியா ஜெயிச்சா ரொம்பப்பெருமையா இருக்கும் என்று தனது டென்சனான உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் கவின்.
பிக்பாஸ் சீஸன் 3’யின் இறுதி நாள் கொண்டாட்டம் சற்றுமுன்னர் சரியாக 6 மணிக்கு விஜய் டிவியில் துவங்கியது.வெள்ளை வெளேர் கோர்ட்டில் அட்டகாசமான தோற்றத்தில் அசத்தலாக வந்த கமல் நிகழ்ச்சியின் முதல் சுற்றில் பார்வையாளர்களுடன் உரையாடினார். இரண்டு தம்பதிகள் தங்கள் காதல் திருமண அனுபவத்தைப் பகிர்ந்த பிறகு ஒரு குழந்தை தனது தந்தை வேலை முடிந்து தாங்கள் தூங்கிய பிறகு வீடு திரும்புவது குறித்து புகார் செய்யவே அக்குழந்தைக்கு தந்தையரின் நிலமையை விளக்கி சமாதானம் செய்த கமல் தனது மகாநதி படக் காட்சி ஒன்றையும் உதாரணமாகச் சொன்னார்.
அடுத்து இறுதிப்போட்டியாளர்கள் 4 பேர் குறித்து கவிதைகள் எழுதி அதை ஃப்ரேம் போட்டு பரிசாகக் கொடுத்த கமல் ‘நீங்க மிஸ் பண்ணின விசயங்களை டெலிகாஸ்ட் பண்ணப்போறோம்’என்றபடி விளம்பர இடைவெளி விடுகிறார். அடுத்த புரோமோவில் சேரன்,கவின் ஆகியோரிடம் ‘யார் பைனலுக்கு வரவாங்க’என்று கேட்க சேரன் முகேன் மற்றும் லாஸ்லியா பெயரை சொல்ல அடுத்து பதில் சொல்லும் கவின்,’’யாரு ஜெயிச்சாலும் சந்தோசமா இருக்கும். ஆனா அவங்க எல்லாரையும் விட லாஸ்லியா ஜெயிச்சா ரொம்பப்பெருமையா இருக்கும்'என்று இன்னும் தன் காதலிக்காக அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.