லாஸ்லியாவால் என் அப்பாவின் பாசம் தெரிய வந்தது..! கமலிடம் குட்டி பெண் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

Published : Oct 06, 2019, 06:25 PM IST
லாஸ்லியாவால் என் அப்பாவின் பாசம் தெரிய வந்தது..! கமலிடம் குட்டி பெண் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

சுருக்கம்

பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, 'பிக்பாஸ்' பைனல் நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு துவங்கியது. பெருவாரியான ரசிகர்கள் மத்தியில், வெள்ளை நிற கோர்ட்டில்... வீறு நடை போட்டு மேடைக்கு வந்த கமல் பேச துவங்கினார்.  

பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, 'பிக்பாஸ்' பைனல் நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு துவங்கியது. பெருவாரியான ரசிகர்கள் மத்தியில், வெள்ளை நிற கோர்ட்டில்... வீறு நடை போட்டு மேடைக்கு வந்த கமல் பேச துவங்கினார்.

முதல் முறையாக, மக்களிடம் இந்த நிகழ்ச்சியின் மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் என கேள்விகளை கமல் கேட்க, அதற்கு ரசிகர்களும் பதில் கூறினர்.

முதலில் பேசிய ஒரு தம்பதி, சாண்டி அடிக்கடி அவர் மனைவியை பற்றி பகிர்ந்து கொள்ளும் சம்பவங்கள், மற்றும் அவரின் காமெடி பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது என்றும் தங்களுடைய வாழ்விலும் அது மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறினர்.

இதை தொடர்ந்து பேசிய ஒரு குட்டி பெண்... தன்னுடைய அப்பா கடையில் வேலை செய்கிறார். நாங்கள் பள்ளிக்கு செல்லும் முன்பே அவர் கடைக்கு கிளம்பி போய் விடுவார். அதே போல் தூங்கிய பிறகு தான் வருவார். இதனால் அவருக்கு எங்கள் மீது பாசமே இல்லை என்று நினைத்தோம். 

ஆனால் லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்த அவரிடம் மிகவும் எமோஷ்னலாக பேசியதை பார்த்து விட்டு மறவாது நாள் எங்களுக்காக கடைக்கு லீவ் போட்டு விட்டு, தங்களுடன் இருந்தார். அப்போது தான் என் அப்பாவின் பாசம் தனக்கு தெரிய வந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அந்த குட்டி பெண்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!