’என் அண்ணியே கூட என்கிட்ட ஆறு மாசம் பேசலை’ பெர்சனல் சீக்ரெட் சொன்ன கமல்...

Published : Oct 06, 2019, 06:28 PM IST
’என் அண்ணியே கூட என்கிட்ட ஆறு மாசம் பேசலை’ பெர்சனல் சீக்ரெட் சொன்ன கமல்...

சுருக்கம்

பிக்பாஸ் சீஸன் 3’யின் இறுதி நாள் கொண்டாட்டம் சற்றுமுன்னர் சரியாக 6 மணிக்கு விஜய் டிவியில் துவங்கியது.வெள்ளை வெளேர் கோர்ட்டில் அட்டகாசமான தோற்றத்தில் அசத்தலாக வந்த கமல் நிகழ்ச்சியின் முதல் சுற்றில் பார்வையாளர்களுடன் உரையாடினார். இரண்டு தம்பதிகள் தங்கள் காதல் திருமண அனுபவத்தைப் பகிர்ந்த பிறகு ஒரு குழந்தை தனது தந்தை வேலை முடிந்து தாங்கள் தூங்கிய பிறகு வீடு திரும்புவது குறித்து புகார் செய்யவே அக்குழந்தைக்கு தந்தையரின் நிலமையை விளக்கி சமாதானம் செய்த கமல் தனது மகாநதி படக் காட்சி ஒன்றையும் உதாரணமாகச் சொன்னார்.  

மற்றவர்களைக் கலாய்க்கும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதிலும் பெண்களைக் கலாய்க்கும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படி ஒருமுறை நான் கலாய்த்ததற்காக என் அண்ணியே கூட என்னுடன் ஆறு மாதங்கள் பேசாமல் இருந்தார்’என்று தனது பெர்சனல் சீக்ரெட் ஒன்றுடன் இன்றைய இறுதிநாள் நிகழ்ச்சியைத் துவக்கினார் கமல்.

பிக்பாஸ் சீஸன் 3’யின் இறுதி நாள் கொண்டாட்டம் சற்றுமுன்னர் சரியாக 6 மணிக்கு விஜய் டிவியில் துவங்கியது.வெள்ளை வெளேர் கோர்ட்டில் அட்டகாசமான தோற்றத்தில் அசத்தலாக வந்த கமல் நிகழ்ச்சியின் முதல் சுற்றில் பார்வையாளர்களுடன் உரையாடினார். இரண்டு தம்பதிகள் தங்கள் காதல் திருமண அனுபவத்தைப் பகிர்ந்த பிறகு ஒரு குழந்தை தனது தந்தை வேலை முடிந்து தாங்கள் தூங்கிய பிறகு வீடு திரும்புவது குறித்து புகார் செய்யவே அக்குழந்தைக்கு தந்தையரின் நிலமையை விளக்கி சமாதானம் செய்த கமல் தனது மகாநதி படக் காட்சி ஒன்றையும் உதாரணமாகச் சொன்னார்.

அடுத்து சாண்டி மாஸ்டரின் கலாய்ப்பு குறித்து ஒருவர் பேசவே’ஆமா மத்தவங்களைக் கலாய்க்கிறப்ப கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். குறிப்பா பெண்கள் கிட்ட அவங்களைக் கொஞ்ச நாள் கழிச்சிப் பாக்குறப்ப...ப்ப்ப்பா என்ன இவ்வளவு குண்டாயிட்டீங்கன்னு கேட்டாக்கூட டென்சனாயிடுவாங்க. என்னோட சொந்த அனுபவத்துல சொல்றேன். என்னோட அண்ணியை ஒருமுறை என்ன அண்ணி இவ்வளவு குண்டாயிட்டீங்கன்னு கேட்டதுக்காக அவங்க என்கிட்ட ஆறுமாசமா பேசாம இருந்தாங்க’என்று எச்சரிக்கயுடன் சொன்னார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!