ஷங்கருக்கு பிறந்தநாள்! ஒருபக்கம் கமல் வாழ்த்து.. மறுபக்கம் ‘இந்தியன் 2’ அப்டேட் - டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்

By Ganesh A  |  First Published Aug 17, 2022, 11:29 AM IST

Indian 2 : இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் ஷங்கருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


ஜென்டில்மேன் தொடங்கி எந்திரன் 2.0 வரை தொடர்ந்து தான் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பிரம்மாண்டத்தை நிகழ்த்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஷங்கருடன் இந்தியன் படத்தில் பணியாற்றிய நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... குட்டை கவுனுடன்...வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பிய ஹன்சிகா..வீடியோ உள்ளே!

‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan)

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இயக்குனர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடந்த இந்தியன் 2 படத்தின் பணிகளும் இன்று முதல் தொடங்கி உள்ளதாம். அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான செட் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், வேறு மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்தாமல் சென்னையிலேயே செட் அமைத்து ஷூட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இனி லீக் ஆக வாய்ப்பே இல்ல... படக்குழுவுக்கு இயக்குனர் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

click me!