'விருமன்' படத்தின் வெற்றிவிழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் அதிதி ஷங்கர் மற்றும் கார்த்தி ஆகியோர் கபடி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'கொம்பன்' படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடித்த 'விருமன் ' திரைப்படம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் மட்டுமே நெகடிவ் கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், பலர் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலம் படத்தை வெற்றிபெற செய்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ள, பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முதல் படத்தியிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.
மேலும் செய்திகள்: முதல் முறையாக ஐ மேக்சில் வெளியாகும் தமிழ் படம் 'பொன்னியின் செல்வன்'..!
அதே போல் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே... அல்டிமேட் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராஜ்கிரன், சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி என அனைவரும் தங்களின் கதாபாத்திரத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள இந்த படத்தை, ஏற்கனவே தன்னுடைய சகோதரர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்த சூர்யா தான் தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் செய்திகள்: நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட... விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் வீடியோ..
விருமன் படம் தொடர்ந்து வசூலில் கெத்து காட்டி வரும் நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஏற்கனவே படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை சூர்யா வழங்கிய நிலையில், இன்று மிகப்பிரமாண்டமாக படக்குழுவினர் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் விதமாக சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் என பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜிபி -யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சக்ஸஸ் மீட்டின் போது, அதிதி ஷங்கர் குட்டை உடையில் நடிகர் கார்த்தியுடன் கபடி விளையாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
| விருமன் திரைப்படத்தின் வெற்றியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிய படக்குழு. | | | | pic.twitter.com/8knP9Q4wMK
— Senthilraja R (@SenthilraajaR)