
விஜய் டிவியில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் வசீகரித்து, அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலம். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் மற்ற போட்டியாளர்களை முடிந்த வரை சிரிக்க வைத்த பிரியங்கா, தாமரைச் செல்வியுடன் சண்டை போட்டது, நிரூப் உடன் மோதலில் ஈடுபட்டது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். எனினும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார் என கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் விஜய் டிவியில் தன்னுடைய கலகலப்பான பேச்சால் ஒரு தொகுப்பாளராக ரசிகர்களை கவர துவங்கி விட்டார்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா, தன்னுடைய விடுமுறை நாளை கொண்டாடும் நோக்கில், கனடா சென்றுள்ளார் என கூறப்படுகிறது. அங்கு மிகவும் சந்தோஷமாக... நடு ரோட்டில் நின்றபடி, வேற லெவலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியங்கா அழகாக பேசுவது போல் நன்றாக நடனமும் ஆடுகிறார் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதோடு, இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.