குட்டை கவுனுடன்...வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பிய ஹன்சிகா..வீடியோ உள்ளே!

By Kanmani P  |  First Published Aug 16, 2022, 9:55 PM IST

வீடியோவில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் ஷார்ட் பாவாடை அணிந்து அவர் தேவதை போல் சுற்றி திரியும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர்  விஷால், சூர்யா, விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டதன் மூலம்  இங்கு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்த இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வந்த.

இதற்கு இடையே ஹாரர் மூவிஸை கையில் எடுத்த ஹன்சிகா அரண்மனை சீரிஸில் கலக்கி இருந்தார். பின்னர் டாப் 10 நாயகிகள் போல இவரும் கதாநாயகிகளுக்கு பொருந்தும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவரது ஐம்பதாவது படமாக மஹா வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிம்பு காமியோ ரோலில்  நடித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...வரவர கிளாமர் தூக்குதே...சேவல் பட நாயகி பூனம் பஜ்வாவின் லோ நெக் போட்டோஸ்...

முன்னதாக சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரம் சமூக வலைதளத்தில் கிசுகிசுக்களை கிளம்பி வந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது மஹா படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது. அந்த போஸ்டரில் ஹன்சிகா சாமியார் வேடம் அணிந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ் கொடுத்திருந்தார். ஆனால் படம் வெளியாகி உப்பு சப்பில்லாமல் போய்விட்டது என்றே கூறலாம்.

கலவையான விமர்சனங்களை பெற்று படம் பிளாப்பை சந்தித்தது. பின்னர் பட வாய்ப்புகளுக்காக கொழுகொழுவென  இருந்த ஹன்சிகா மோத்வானி தனது உடலை பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஒல்லி பெல்லியாக்கி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் தட்டி வருகிறார். அதோடு சமீபத்தில் தனது 31வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் இது குறித்தான புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்று வந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மகனுடன் கணவருக்கு முத்தமிட்ட காஜல் அகர்வால்..க்யூட் புகைப்படம் இதோ

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் ஷார்ட் பாவாடை அணிந்து அவர் தேவதை போல் சுற்றி திரியும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...தேசிய விருதுக்கு தகுதியானவர் கார்த்தி ...புகழ்ந்து தள்ளிய வடிவுக்கரசி!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

click me!