INDIAN IS BACK இன்ட்ரோ வீடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி கூறிய கமல் ஹாசன்!

By manimegalai a  |  First Published Nov 3, 2023, 8:00 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள, 'இந்தியன் 2' இன்ட்ரோ வீடியோவை வெளியிட்ட ரஜினிகாந்துக்கு, கமல் எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
 


உலக நாயகன் கமல்ஹாசனின் 69 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்றைய தினம், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 

அதன்படி இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை தமிழில், நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 5:30 மணிக்கு ரிலீஸ் செய்தார். இதற்காக தற்போது கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், தன்னுடைய அன்பான நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை தெலுங்கில் ராஜமௌலியும், இந்தியில் அமீர் கானும் , கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டனர். இந்த வீடியோ வெளியானது முதல், அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவது மட்டும் இன்றி, படம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும்  தூண்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா? 23 லீக்கான தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'இந்தியன் 2' உருவாகியுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Thank you for your love my friend, superstar !

Vanakkam India. INDIAN IS BACK! https://t.co/rzhhYWn684

— Kamal Haasan (@ikamalhaasan)

 

click me!