பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இன்று தொகுப்பாளர் கமல் ஹாசன் வந்து, போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாராகியுள்ளார். முதல் புரோமோவிலேயே நாட்டையும், வீட்டையும் ஒப்பிட்டு பதுக்கல்... சுரண்டல் என பொடி வைத்து பேசிய கமல்... இந்த வார ஸ்வீட் டாஸ்காக மாற்றிய போட்டியாளர்களின் உண்மையான முகம் இதுவா? அல்லது இந்த டாக்கிற்காக இப்படி விளையாடி வருகிறார்களா? என குழப்பத்துடன் பேசினார்.
இதை தொடர்ந்து வெளியான புரோமோவில், இந்த வாரம் பல போட்டியாளர்களிடம் சண்டை போட்டு... வாக்குவாதத்தில் ஈடுபட்ட, மணிகண்டனிடம் கமல் ஹாசன், நல்லவர் என்கிற முகமூடியோடு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர் யார் என கேட்கிறார். இதற்க்கு மணிகண்டன், ரொம்ப நல்லவராக மாறி அப்படி யாரையும் நான் இதுவரை பார்க்கவில்லை என கூறியதும், அதற்க்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்ஷன் வேற லெவல் என்று தான் கூறவேண்டும்.
Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில்... பிக்பாஸிடம் இருந்து வந்த சில தகவல்களை, கமல் ஹாசன் முன்பு அசீம் படிக்கிறார். அப்போது அமுதவாணன் பர்சனல் அட்டாக் செய்வதாக அதில் எழுதி உள்ளது. இந்த கருத்தை யார் ஒப்புக்கொள்கிறீர்கள்... அப்படி யார் யாருக்கெல்லாம் தோன்றுகிறது என கேட்க அதற்க்கு விக்ரமன், அவர் காமெடி மூலம் பர்சனல் அட்டாக் செய்வதாக தனக்கு தோன்றியது என, ஒரு விஷயத்தை குறிப்பிட்டு கூறினார். இதை தொடர்ந்து அசீம் படிப்பதில், இங்கு நடந்து கொள்வது போல் வெளியில் நடந்து கொண்டால் தனலட்சுமி அறை தான் வாங்குவார் என கூறப்பட்டுள்ளது. இதனை அசீம் படித்ததும், பேய் அடித்தது போல் பார்க்கிறார் தனலட்சுமி.
இன்றைய தினம் வெளியாகியுள்ள புரோமோவே நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோ இதோ...
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/V3QDu4SaoA
— Vijay Television (@vijaytelevision)