நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க ஸ்வீட் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொண்டது, பார்வையாளர்களையே வெறுப்படைய செய்தது. காரணம், இந்த வாரம் முழுக்க அனைவருமே, ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை காட்டி திட்டிக்கொண்டும், சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்களே தவிர, புத்திசாலித்தனமாக நேர்மையாக விளையாட வேண்டும் என்பதையே மறந்து விட்டனர்.
தங்களுடைய அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று விழுந்து பிரண்டு , சண்டை போட்டு காரியத்தை சாதித்தனர். அதிலும் நேற்றைய தினம், அமுதவாணனை... மணிகண்டன் தாக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதனை பெரிய பிரச்சனையாக இருவருமே கொண்டு செல்லாமல், சுமூகமாக முடிந்தது. மேலும் விமர்சனங்களை ஏற்க மறுத்து, ஜனனி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததும்... அவர் குழந்தை தனமாக நடந்து கொள்கிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஒருபுறம் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருந்தாலும், இந்த வாரம் யார் குறைவான வாக்குகளுடன் வெளியேறுவார் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் மகேஸ்வரி அல்லது ராம் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த வாரம் கமல் ஹாசன் ரசிகர்கள் முன் பேசும் முதல் புரோமோ தற்போது வெளியாகியுளளது.
ஸ்வீட் செய்ய சொன்னால், போட்டியாளர்கள் ஃபைட் செய்து வருவதாகவும், பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து விட்டால் பதுக்களும்... சுரண்டலும் அதிகமாகிவிடும், நாட்டில் மட்டும் அல்ல வீட்டிலும் என கூறி... இது தான் இவர்களின் உண்மையான முகமா? அல்லது முகமூடி போட்டு விளையாடி வருகிறார்களா? என பேசியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/YdCMdhICiU
— Vijay Television (@vijaytelevision)