உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி! நெகிழ்ந்து பேசிய கமலஹாசன் !

Published : Jan 23, 2020, 05:54 PM IST
உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி! நெகிழ்ந்து பேசிய கமலஹாசன் !

சுருக்கம்

தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து “83” என்கிற படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களுக்காக வழங்க உள்ளனர்.   

தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து “83” என்கிற படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களுக்காக வழங்க உள்ளனர். 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இந்திய அணி கேப்டன் கபில்தேவ் வாழ்க்கையில் நடித்துள்ள படம், 83 .  இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள்.

தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. 

அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து நடிகர் கமலஹாசன் கூறியுள்ளதாவது.... 

83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி. 

தொடர்ந்து கதை அம்சமுள்ள , மற்றும் வெகு ஜன  ரசனைக்கேற்ப படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் தயாரித்து வரும் Y Not ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த்  இந்தப் படத்தை விநியோகம் செய்ய உள்ளார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!