ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jan 23, 2020, 5:09 PM IST

ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. 


சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி... பட்டுப்புடவையில் எக்கி இடுப்பை காட்டி இளசுகளை விக்கி நிற்க வைக்கும் கவர்ச்சி போஸ்....!

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதையும் படிங்க: தொடை தெரிய ஓவர் கிளாமர் டிரெஸில் கோவிலுக்கு போன பிரபல தொகுப்பாளினி... சரமாரியாக திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்...!

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற  அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

இப்படி, தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், புதிதாக ஃபோட்டே ஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக செம்ம ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. படு ஹாட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: கமலின் கட்டிப்பிடி வைத்தியத்தை வேற லெவலுக்கு வைரலாக்கிய பாலிவுட் நடிகை... வைரலாகும் வீடியோ...!

நடிகைகள் பலரும் ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சி போஸ்கள் கொடுப்பது புதிதல்ல என்றாலும், இதுவரை கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, கவர்ச்சி இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஒரே அடியாக ஓவர் கிளாமர் ரூட்டுக்கு மாறியது ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!