நெஞ்சை பதற வைக்கும் திக்... திக்... நிமிடங்கள் ... "சைக்கோ" படக்குழு வெளியிட்ட 2 நிமிட ஸ்னீக் பீக்...!

By Akshit Choudhary  |  First Published Jan 23, 2020, 5:47 PM IST

இதுவரை வெளியான "சைக்கோ" படத்தின் டிரெய்லர், டீசர் என எதிலும் வசனங்கள் இல்லாமல், இருட்டையும், மியூசிக்கையும் வைத்து மிரட்டி இருந்தார் மிஷ்கின். 


இயக்குனர் மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சைக்கோ' இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இதுவரை ஏற்று நடித்திராத, கண்தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தத்துரூபமாக இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு சில பயிற்சிகளையும், உதயநிதி எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவர் நடித்துள்ளனர்.  மேலும் சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ரேணுகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். சைக்கோ திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி... பட்டுப்புடவையில் எக்கி இடுப்பை காட்டி இளசுகளை விக்கி நிற்க வைக்கும் கவர்ச்சி போஸ்....!

2 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் அந்த ஸ்னீக் பீக் வீடியோ ஏதோ புரியாத புதிருக்குள் நம்மை கொண்டு செல்கிறது. காணாமல் போன பெண்ணின் சடலத்தை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் திரும்பும் அந்த அம்மாவின் திக்... திக்... நொடிகள் நம்மை அச்சத்தில் உறையவைக்கிறது. 

இதையும் படிங்க: ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...!

இதுவரை வெளியான "சைக்கோ" படத்தின் டிரெய்லர், டீசர் என எதிலும் வசனங்கள் இல்லாமல், இருட்டையும், மியூசிக்கையும் வைத்து மிரட்டி இருந்தார் மிஷ்கின். ஆனால் இந்த ஸ்னீக் பீக் வீடியோ வசனத்துடன் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சைக்கோ ஸ்னீக் பீக் வீடியோ இதோ.... 

 

tags
click me!