
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் அரசியலில் இணைந்தால் மக்களிடம் ஆதரவு, கிடைக்குமா... கிடைக்காதா... என்பது போன்ற பல கேள்விகள்தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது போன்ற கேள்விகள், பிரபலங்கள் முன்னிலையிலும் கேட்கப்படுகிறது.
அந்த வகையில், கோவையில் நடைபெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சிரித்து கொண்டே, மிகவும் கூலாக பத்தி கொடுத்தார். ஆனால், கமல், ரஜினி இணைந்து அரசியல் செய்வது குறித்த கேள்விக்கு மட்டும் கருத்து கூற மறுத்துவிட்டார்.
கமலும் - ரஜினியும் அரசியலில் இணைந்து செயல்படுவதை பற்றி பேச ஒன்றுமில்லை என்றும், அரசியல் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இவரிடம் இருந்த இப்படி ஒரு பதில் வரும் என்று சற்றும் எதிர்பாராத செய்தியாளர்களுக்கு இது செம்ம ஷாக்காக இருந்தது என்றே கூறலாம்.
நடிகை ஓவியாவை பொறுத்தவரையில், அவர் தீவிர ரஜினி ரசிகர். அதே போல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, மக்கள் மனதை வென்றது போல, கமலின் பேவரட் போட்டியாளராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.