முழு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன்... இயக்குநர் ஷங்கரை தலை சுற்றவைத்த சம்பவம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 10, 2020, 09:35 PM IST
முழு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன்... இயக்குநர் ஷங்கரை தலை சுற்றவைத்த சம்பவம்...!

சுருக்கம்

இந்நிலையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ளதால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கும்படி கமல்ஹாசன் படக்குழுவை கேட்டிருக்கிறாராம். 

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. 

இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, அதன் பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

 

இதையும் படிங்க: கதறி அழுத ‘வடிவேல்’ பாலாஜி மகள்... இதயத்தை சுக்கு நூறாக வெடிக்க வைக்கும் காட்சிகள்...!

இந்நிலையில் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது. மேலும் இரண்டு பட அளவிற்கு இருக்கும் காட்சிகளை படக்குழு சுருக்கி வருகிறது. தற்போது கிரேன் விபத்து நடைபெற்ற ஈவிபி அரங்கில் இருந்த அரங்குகள் அனைத்தும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது 75 பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளித்திருக்கிறது என்பதால் சில சிறிய படங்கள் படப்பிடிப்பை துவங்கி இருக்கின்றன. ஆனால் இந்தியன்-2 போன்ற பிரம்மாண்ட படங்களில் அவ்வளவு குறைந் ஊழியர்களை மட்டும் கொண்டு படப்பிடிப்பு நடத்துவது இயலாத காரியமாக இருக்கும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் இயக்குநர் ஷங்கர் விழி பிதுங்கி நிற்கிறாராம்.

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!

இந்நிலையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ளதால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கும்படி கமல்ஹாசன் படக்குழுவை கேட்டிருக்கிறாராம். தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்பதால் அதில் முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். நடிகனாக சினிமாவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்த கமல், தற்போது முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார். நிச்சயம் தனது போர்ஷனை ஜனவரிக்குள் முடித்துக்கொள்ளுங்கள் என ஷங்கரிடம் வலுவாக கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட், ஆட்கள் நெருக்கடி என பல சிக்கலில் இருக்கும் ஷங்கர் இதனால் திக்குமுக்காடி போயுள்ளாராம். 
a

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!