வடிவேல் பாலாஜியின் மரணம்... பேச்சே வரவில்லை! 19 வருட கால நண்பன் பற்றி ரோபோ ஷங்கர் வெளியிட்ட வீடியோ!

Published : Sep 10, 2020, 08:35 PM IST
வடிவேல் பாலாஜியின் மரணம்...  பேச்சே வரவில்லை! 19 வருட கால நண்பன் பற்றி ரோபோ ஷங்கர் வெளியிட்ட வீடியோ!

சுருக்கம்

மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவரது மறைவு குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.  

மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவரது மறைவு குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. சமீப காலமாக இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பட வாய்ப்புகளும் கிடைத்தது. 

மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் கிடைத்து, சின்னத்திரை தாண்டி வெள்ளி திரை காமெடி நடிகராக வளைந்து வந்த நேரத்தில் தான், 45 வயதிலே இந்த துயர சம்பவம் வடிவேலு பாலாஜிக்கு நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் கிட்ட தட்ட  19 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த கலைஞர், நண்பர் வடிவேலு பாலாஜி பற்றி  நடிகர் ரோபோ சங்கர் மிகவும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இந்த வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது...  “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன் வடிவேலு பாலாஜி.  சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞருக்கு, மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி மற்றும் நண்பர்கள் சென்று நலம் விசாரித்து, விரைவில் திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. 

இப்படி படம் பொறுக்காமல் வேதனையுடன் பேசி, கடைசியில் வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார் ரோபோ ஷங்கர். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?