வேட்டைக்கு ரெடியான கமல்..வெளியானது பிக்பாஸ் 6 மிரட்டல் ப்ரோமோ

Published : Sep 05, 2022, 08:50 PM ISTUpdated : Sep 05, 2022, 08:54 PM IST
வேட்டைக்கு ரெடியான கமல்..வெளியானது பிக்பாஸ் 6  மிரட்டல் ப்ரோமோ

சுருக்கம்

வேட்டையை ஆரம்பிக்கலாமா எனும் டயலாக்கும் பேசுகிறார். இதன் மூலம் இந்த பிக் பாஸ் சீசன் 6 வேற மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கும் என்பது தெரிய வருகிறது.

தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழுக்கு அறிமுகம் ஆனது. மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் பிரபல நடிகரை தொகுப்பாளராக வைக்க எண்ணிய தயாரிப்பு நிறுவனம் கமலஹாசனை களம் இறக்கியது.

முதல் சீசனிலேயே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்ததால் பிக் பாஸ் பட்டி தொட்டியெல்லாம் தனது புகழை பரப்பிக் கொண்டது. பிரபலங்களை 100 நாட்கள் தனி ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்கள் உள்ளிருக்கும் நாட்களில் வெளி தொடர்பு எதுவும் இன்றி. உடன் இருப்பவர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதை மூளைக்கு மூளை கேமராக்கள் வைத்து கண்காணிக்கும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...முதல் சிங்கிள் போஸ்டருடன் ட்விஸ்ட் வைத்த தனுஷ்...இரண்டாவது ராஜாவை தேடும் ரசிகர்கள்

அதோடு பிக் பாஸில் கலந்து கொள்ளும் அனைவரும் பிரபலங்களாகிவிடலாம் என்கிற பெயரையும் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னரானார் இதை தொடர்ந்து ஒளிபரப்பான இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் மூக்கின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும்  டைட்டிலை தட்டிச் சென்றனர். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சம்பளமும் கொடுக்கப்படும். தற்போது இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசனுக்கு வந்துள்ளது. 

இதற்கிடையே பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி தளம் மூலம் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. முந்தைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறாத போட்டியாளர்கள் அதில் பங்கேற்றனர். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்ப்பை பெறவில்லை. இதை அடுத்து தற்போது பிக் பாஸ் 6 கான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்தான தகவலும் பரவி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

அந்த வகைகள் பிக்பாஸ் 6-ல்  தொகுப்பாளர் ரக்ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என பேசப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 6-க்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் வழக்கத்திற்கு மாறாக இந்த நிகழ்ச்சிக்காக செட் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசன்களுக்கு அழகிய வீடுகளுடன்  ப்ரோமோ வெளியிடப்பட்டு வந்தது. தற்போது காய்ந்த சருகுகள், காய்ந்த மரம் என இருண்ட காட்டிற்கு ஒப்பான செட்டில் நிற்கிறார் கமலஹாசன். அதோடு வேட்டையை ஆரம்பிக்கலாமா எனும் டயலாக்கும் பேசுகிறார். இதன் மூலம் இந்த பிக் பாஸ் சீசன் 6 வேற மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கும் என்பது தெரிய வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்