செம சூப்பர்… ரஜினிக்கு அடுத்து …நடிகர் கார்த்தி தான்.. வெளியான மாஸ் அறிவிப்பு

Published : Nov 08, 2021, 09:10 PM IST
செம சூப்பர்… ரஜினிக்கு அடுத்து …நடிகர் கார்த்தி தான்.. வெளியான மாஸ் அறிவிப்பு

சுருக்கம்

நடிகர் கார்த்தி நடித்து படு ஹிட்டான கைதி படம், ஜப்பானிய மொழியில் வெளியாகிறது.

சென்னை: நடிகர் கார்த்தி நடித்து படு ஹிட்டான கைதி படம், ஜப்பானிய மொழியில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. வாரிசு நடிகர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அவர் பின்னர் தமது நடிப்பு திறமையால் பலராலும் விரும்பப்படும் நடிகராக மாறி இருக்கிறார்.

படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், கெட்டப்புகள் என ரசிகர்களை ரசிக்க வைக்க தவறுவது இல்லை. படத்தை எடுக்கும் இயக்குநர்களுடன் மிகவும் அன்பும், நெருக்கமும் பாராட்டுவதால் இயக்குநர்களின் நாயகன் என்றும் கார்த்தி அறியப்படுகிறார்.

அவர் நடித்த கைதி படத்தை பற்றி சொல்லவே வேண்டியதில்லை… படம் முழுக்க தமது பார்வையாலும், ஆக்ஷனாலும் மாஸ் காட்டி இருப்பார். மாநகரம் என்ற வித்தியாசமான கதை களத்தில் அட்டகாசம் காட்டி அறிமுகம் ஆன இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தை அழகாக இயக்கி கார்த்தியை வேறு ஒரு கோணத்தில் பட்டையை காட்டி இருப்பார்.

2019ம் ஆண்டு இந்த படம் ரிலீசானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க படமாக கைதி இருந்தது. ஆகையால் லோகேஷ் கனகராஜின் அடுத்த கட்ட சினிமா வாய்ப்புகளும் கமல் வரைக்கு கொண்டு போய்விட்டது.

தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், கார்த்தி ரசிகர்கள் மத்தியிலும் சூப்பர் என்று பாராட்டுகளை பெற்ற இந்த படம் இப்போது ஜப்பானிய மொழியில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு குழு கூறி இருக்கிறது.

கைதி என்றால் ஜப்பானிய மொழியில் ச்சியோசின் என் அழைப்பார்கள். பொதுவாக தமிழக சினிமாவுக்கும், ஜப்பான் ரசிகர்களுக்கும் ஒரு இணக்கமான பார்வையும், ரசிக்கும்தன்மையும் உண்டு. மொழி அடிப்படையில் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா என்ற கலைத்துறையில் ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிகாந்தின் படங்களை விரும்பி பார்ப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், மாஸ் வசனங்களை தமிழ் தெரியாவிட்டாலும் மனப்பாடம் செய்து ஒப்புவித்த ஜப்பான் நாட்டு ரசிகர்கள் இன்னமும் இருக்கின்றனர். ரஜினியின் அண்ணாத்த படமும் அங்கு ரிலீசாகி இருக்கிறது.

இப்போது ரஜினிகாந்த், பாகுபலி படங்களை அடுத்து நடிகர் கார்த்தியின் கைதி படம் ஜப்பானிய மொழியில் வெளியாகிறது.படம் பற்றிய போஸ்டர்களும் ஜப்பான் மொழியில் வெளியாகி உள்ளது, ரசிகர்களை அட சூப்பரு என்று பேச வைத்திருக்கிறது.

போஸ்டரில் உள்ள எழுத்துகளை ரசிகர்கள் அறியாவிட்டாலும் படம் ஜப்பான் மொழியில் வெளியாகிறது என்ற அறிவிப்பை கண்டு குஷியாகி இருக்கின்றனர். வரும் 19ம் தேதி கைதி படம் ஜப்பானிய மொழியில் ரிலீசாகிறது.

அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன. ஜப்பானில் உள்ள தியேட்டர்களின் கைதி படத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரியாது. நிச்சயம் ஜப்பான் நாட்டு ரசிகர்களுக்கு செம தீனியாக இருக்கும் என்றும் கார்த்தி ரசிகர்கள் கூறி வருகின்றனர்… அது உண்மையாக என்பதை இன்னமும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்…!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்