
நடிகைகளை கௌரவகிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் JFW திரைப்பட விருதுகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவில், பல்வேறு பட்டியலின் கீழ் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நடிகை ஜோதிகாவுக்கு, பெண்களை மையப்படுத்தி எடுக்கட்ட 'ராட்சசி' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 90 களின், இடுப்பழகி நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார்.
மேலும் செய்திகள்: புதிதாக வாங்கும் தங்க நகையை உப்புக்குள் வைப்பதால் என்ன நடக்கும்?
இந்த விருது விழாவில், நடிகை ஜோதிகாவிடம் சிலம்பம் சுத்த சொல்லி அனைவரும் கோரிக்கை வைக்க, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜோதிகா, மேடையில் அனைவர் முன்பும் சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார்.
இது குறித்த, ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.