
கொரோனா வைரஸின் தாக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளின் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்ப்பதற்காக, திருமணம், போன்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைக்குமாறும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை உத்ரா உன்னி தனது திருமண கொண்டாட்டங்களை ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், "உலகில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலைமை அமைதி அடையும் வரை எங்கள் திருமண கொண்டாட்டங்களை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
திருமண தேதி அன்று, கோவிலில் தாலி காட்டும் விழாவை நடத்துவோம். வரவேற்பு தேதி மற்றும் மற்ற தகவலைகளை விரைவில் வெளியிடுவேன். எல்லோரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உலகத்தை விரைவாக மீட்க விரும்புகிறேன். " என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.