நீண்ட இடைவெளிக்கு பின் ரீமேக் படம்.....அக்சய் குமாரின் பேபி படத்தில் ஜெயம் ரவி..

 
Published : Jan 28, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
நீண்ட இடைவெளிக்கு பின் ரீமேக் படம்.....அக்சய் குமாரின் பேபி படத்தில் ஜெயம் ரவி..

சுருக்கம்

jayamravi acting remake movie

மீண்டும் ரீமேக் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பேபி

கடந்த 2015 ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்சய் குமார்,டாப்சி,அனுப்பம் கேர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பேபி.இந்த படம் வெளியாகி மக்களிடம் அமோக ஆதரவை பெற்று, சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட விருப்பதாகவும் அதில் ஜெயம் ரவி நடிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின.



டிக் டிக் டிக்

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படமான டிக் டிக் டிக் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் நடித்துள்ளார்.இப்படம் விண்வெளி வீரர்களின் பற்றிய கதையாகும்.



அதிகார பூர்வ தகவல் இல்லை

இந்நிலையில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான பேபி படத்தின் ரீமேக்  உரிமையை இயக்குனர் அஹமத் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் படக்குழு சம்பந்தபட்டவர்களோ ஜெயம் ரவி தரப்பிடமிருந்தோ எந்த வித அதிகார பூர்வ தகவலும் வெளிவரவில்லை.


முன்பு தனது அண்ணன் மோகன் ராஜா  இயக்கத்தில் நடித்து கொண்டிருந்தார் ஜெயம் ரவி. பெரும்பாலும் ரீமேக் படங்களிலேயே நடித்ததால் மோகன் ராஜாவை ரீமேக் இயக்குநர் என்றும் ஜெயம் ரவியை ரீமேக் நடிகர் என்றும் அழைத்தனர். ஆனால் நடிகராக ஜெயம் ரவியும் இயக்குனராக மோகன் ராஜாவும்  நிரூபித்த படம் என்றால் தனி ஒருவன் படம்தான். மீண்டும் அப்படி ஒரு படம் கொடுப்பதாக  எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு  ஏமாற்றத்தை தந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்