மிஸ் யூ கேப்டன்... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ஜெயம்ரவி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எஸ்.ஏ.சி

Published : Jan 06, 2024, 02:09 PM IST
மிஸ் யூ கேப்டன்... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ஜெயம்ரவி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எஸ்.ஏ.சி

சுருக்கம்

கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கேப்டன் மரணமடைந்த சமயத்தில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றுவிட்டதால், அவர்களால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாமல் போனது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஒவ்வொருவராக மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். அவர்கள் சென்னை திரும்பிய கையோடு விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று நடிகர்கள் சூர்யா, ஷிவராஜ்குமார், கார்த்தி, சிவக்குமார், பிக்பாஸ் பூர்ணிமா ஆகியோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர் ஜெயம் ரவியும் நேற்று இரவு விஜயகாந்தின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படியுங்கள்... விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

இந்நிலையில், இன்று காலை இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது கேப்டனின் போட்டோவை பார்த்து சில நிமிடங்கள் எஸ்.ஏ.சி கலங்கி நின்றது காண்போரை கண்கலங்க செய்தது. கேப்டன் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை, செந்தூரப்பாண்டி என பல்வேறு வெற்றிப்படங்களை எஸ்.ஏ.சி இயக்கினார்.

இதையடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்தின் நினைவிடம் வந்து அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் கேப்டன் வீட்டுக்கு தனது மனைவியுடன் சென்று பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படியுங்கள்... https://tamil.asianetnews.com/gallery/gallery/kannada-super-star-shivaraj-kumar-tribute-to-vijayakanth-s6ss1f

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி