அமெரிக்காவின் புகழ்பெற்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நாக்கு முக்க பாடலுக்கு இந்தியர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி இசையமைப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் நாக்கு முக்க. இப்பாடல் ரிலீசான சமயத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. அப்பாடல் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனபோதிலும் அதற்கான மவுசு குறையவில்லை. ஏனெனில் இந்த அளவுக்கு செம்ம மாஸான குத்துப்பாடல் அதன்பின்னர் வெளியாகவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் பேவரைட் குத்துப் பாடலாக நாக்கு முக்க இடம்பெற்று உள்ளது.
எந்த டான்ஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் குத்து டான்ஸ் ஆட போட்டியாளர்களின் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக இருப்பது நாக்கு முக்க பாடல் தான். அப்பாடலை கேட்டாலே நடனமாட தூண்டும் அளவுக்கு ஒரு எனர்ஜி இருக்கும் அது தான் அப்பாடலின் ஸ்பெஷலான விஷயம். சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடத்திய இசைக் கச்சேரியில் கூட நாக்கு முக்க பாடல் பாடப்பட்டபோது அங்கு வந்திருந்த அனைவருமே நடனமாடி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... Kalaingar 100: இன்று கலைஞர் நூற்றாண்டு விழா! கலந்து கொள்ளும் ரஜினி, விஜய், கமல்! அஜித் பங்கேற்பாரா?
இந்த நிலையில், அப்பாடல் சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்று இருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்படும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான America's got talent நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் V Unbeatable என்கிற நடனக்குழு பங்கேற்று நடனமாடி இருந்தனர். அவர்களின் அசத்தல் நடனத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்தது நாக்கு முக்க பாடல் தான்.
இப்பாடலை சற்று ரீமிக்ஸ் செய்து, அந்தரத்தில் பறந்து சாகசம் செய்தவாரு அவர்கள் ஆடிய நடனத்தை பார்த்து அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் மெர்சலாகிப் போகினர். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
.'s performance is so flippin' GOOD! pic.twitter.com/nsqNk2dBJz
— America’s Got Talent (@AGT)இதையும் படியுங்கள்... ஹீரோயின் உடன் டிடிஎப் வாசன் காதல்.... மஞ்சள் வீரனின் மஞ்ச காட்டு மைனா இவர்தானா? - வைரலாகும் போட்டோஸ்