தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
undefined
இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. 7ம் தேதி முதல் மூடப்படும் சாலைகள் விவரம் இதோ.!
அதன்படி, தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா பிரம்மாண்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் 100 விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க;- Pradeep Antony: வாக்கு கொடுத்ததால அமைதியா இருக்கேன்.! ஒற்றை ட்விட்டில் பூர்ணிமாவை அசிங்கப்படுத்திய பிரதீப் !
இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருக்கும் நடிகர் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சந்தேகம் என கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மொத்தம் 6 மணி நேரம் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.