
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. பிக்பாஸ் வைத்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில், யாரும் எதிர்பாராத விதமாக விஷ்ணு வெற்றி பெற்று முதல் ஆளாக ஃபைனலுக்குள் நுழைந்தார். இதையடுத்து எஞ்சியுள்ள விசித்ரா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகிய 7 போட்டியாளர்கள் இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, ஆசையை ஏற்படுத்தி வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார் பிக்பாஸ். விசித்ரா தான் பணப்பெட்டியுடன் வெளியேறினார் என சில தகவல்கள் வெளியான நிலையில்... தற்போது சுமார் 16 லட்சம் தொகையுடன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பூர்ணிமா. எப்படியும் பிக்பாஸ் ஃபைனலுக்குள் செல்ல மாட்டோம் என்பதை தெரிந்து கொண்டு பூர்ணிமா மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டுள்ளார் என்று ரசிகர்கள் சிலர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்... அவருடைய குடும்பத்தினர் பூர்ணிமாவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஆளுயர ரோஜா மாலை, தெருவில் புடவையை இழுத்து சொருகிக்கொண்டு குத்தாட்டம் என அலப்பறை செய்துள்ளார். கமலிடம் ஒவ்வொரு வாரமும் திட்டு வாங்கி கொண்டும்... பிக்பாஸ் ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான பூர்ணிமாவுக்கே இப்படி ஒரு வரவேற்பா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.