ஆரம்பிக்கலாங்களா? ஹீரோவாக ஒரு தமிழ் படம்? - நேர்காணலில் சூசகமாக சொன்ன சிவராஜ் குமார் - இயக்குனர் யார்?

Ansgar R |  
Published : Jan 05, 2024, 05:34 PM IST
ஆரம்பிக்கலாங்களா? ஹீரோவாக ஒரு தமிழ் படம்? - நேர்காணலில் சூசகமாக சொன்ன சிவராஜ் குமார் - இயக்குனர் யார்?

சுருக்கம்

Shiva Rajkumar Tamil Movie : கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் தான் சிவராஜ் குமார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பன் அவர்களால் கடத்தப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர் தான் கன்னட நடிகரும், அரசியல் தலைவருமான ராஜ்குமார். இவருக்கு ஐந்து குழந்தைகள் அதில் கன்னட திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களாக உருவெடுத்தவர்கள் தான் புனித் ராஜ்குமார் மற்றும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் சிவராஜ் குமார். 

நடிகர் சிவராஜ்குமார் கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். 

ஒர்க் அவுட் ஆகாமல் போன செல்பி பாட்டியின் கணக்கு.. வயகராவால் வந்த வில்லங்கம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொண்டுள்ள அன்பு அந்த கதாபாத்திரத்தை செய்ய தன்னை உத்வேகித்ததாக அவர் பல பேட்டிகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. சிவராஜ்குமார் கடந்த 1962 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னையில் தான் படித்து முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிலகத்தில் தான் தனது நடிப்பு பயிற்சியை அவர் மேற்கொண்டார். கன்னட திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வளம் வந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு இவர் பெரிய அளவில் அறிமுகமாகாமல் இருந்து வந்தார். ஆனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய புகழ் வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக விரைவில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லத் திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். 

இந்த சூழலில் கேப்டன் மில்லர் திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது ஹீரோவாக ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இயக்குனர் வடிவேல் இயக்க உள்ள அந்த திரைப்படத்தை பிரபல ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

படத்துக்கு 30 கோடி சம்பளம்.. பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் நாயகி - தீபிகா படுகோனின் Net Worth எவ்வளவு?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய ரஜினி, பிரதீப்... இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியல் இதோ
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்