Boyfriend உடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்.. வைரல் வீடியோ

Published : Jan 05, 2024, 12:32 PM IST
Boyfriend உடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்.. வைரல் வீடியோ

சுருக்கம்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதியில் உள்ள திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வழிபாடு செய்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதியில் உள்ள திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வழிபாடு செய்து புத்தாண்டை தொடங்கினார். ஜான்வி பாரம்பரிய தங்க நிற பார்டருடன் கூடிய பழுப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். மறுபுறம் ஷிகர் அங்கவஸ்திரத்துடன் வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண் சீசன் 8' எபிசோடில் ஜான்வி கபூர் கலந்து கொண்டார். அப்போது ஜான்வியிடம் தனது ஸ்பீட் டயலில் உள்ளமூன்று பேரின் பெயரைக் கூறுமாறு கேட்டார், அப்போது ஷிகர் பெயரையும் சேர்த்து ஜான்வி கூறியதால் அவர் ஷிகருடன் டேட்டிங் செய்வதை உறுதிபடுத்தினார். கரண் ஜோஹர் "உங்கள் ஸ்பீட்-டயல் பட்டியலில் உள்ள மூன்று பேரின் பெயரைக் கூறுங்கள்" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜான்வி, "அப்பா, குஷு மற்றும் ஷிகு" என்று பதிலளித்தார்.

வல்லவன் பட நடிகை ரீமா சென்னுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

ஜான்வி கபூர் டேட்டிங் தொடர்பான வதந்திகள் பரவுவது இது முதன்முறையல்ல. முன்னதாக தடக் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த இஷான் கட்டருடன் ஜான்வி டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. 'தோஸ்தானா 2' படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு அவர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது, ஆனால் கார்த்திக் கரண் ஜோஹருடன் சண்டையிட்ட பிறகு பிரிந்துவிட்டார். மேலும் படம் கைவிடப்பட்டது.

ஜான்வி தற்போது டேட்டிங் செய்து வரும் ஷிகர் பஹாரியா மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். தொழிலதிபரான ஷிகர், போலோ வீரர் மற்றும் பரோபகாரர் ஆவார்.

நான் என்னை இசைஞானியாக நினைக்கவில்லை... அதில் எவ்வித கர்வமும் எனக்கில்லை - இளையராஜா ஓபன் டாக்

இதனிடையே ஜான்வி அடுத்ததாக நடிகர் ராஜ்குமார் ராவுடன் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' படத்தில் நடிக்கிறார். இது ஒரு விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. 'ரூஹி' படத்திற்குப் பிறகு ஜான்வி மற்றும் ராஜ்குமார் இணையும் இரண்டாவது படம் இது. 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷரன் ஷர்மா இந்த படத்தை இயக்குகிறார். ஜான்வி ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலி கானுடன் 'தேவாரா' படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?